pongal festival, thai pongal, தை பொங்கல், ராசிபலன்கள்
  • 6 years ago
சங்கராந்தி என்பது சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதைக் குறிக்கிறது. மகர சங்கராந்தி என்பது சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்வதைக் குறிக்கிறது. தேவர்களுக்குப் பகல் காலமான உத்திராயணத்தின் முதல் நாளான தை மாதம் 01ம் நாள் ஏற்படக்கூடிய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மகர சங்கராந்தியின் பலன்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தை மாதம் 01ம் நாள் 14-01-2018 ஞாயிற்றுக் கிழமை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மூலம் நட்சத்திரம், துருவம் நாம யோகம், வணிசை கரணம் அன்று பகல் 01-46 மணி அளவில் மேஷம் லக்கினம் தனுசு நவாம்சம் உதயமாகும் காலத்தில் சங்கராந்தி பகவான் மகரம் ராசியில் பிரவேசிக்கிறார்.

மகர சங்கராந்தி புருஷன் கோரா என்ற பெயர் கொண்டிருப்பதால் அரசாங்கத்தினால் நற்பலன்கள் கிட்டாது. எருமை வாகனத்தில் வருவதால் மழை அதிகரிக்கும், தீய குணம் கொண்வர்கள் அழிவை சந்திப்பார்கள். கம்பிளி வஸ்திரம் அணிந்திருப்பதால் புது வகையான நோய்கள் தாக்கும்.

முத்து ஆபரணங்கள் அணிந்திருப்பதால் கெட்ட நடவடிக்கை கொண்ட பெண்களுக்கு கெடுதி உண்டாகும். நீர் அபிசேகம் செய்யப்படுவதால் வியாதிகள் பெருகும். சக்கரம் ஆயுதம் கொண்டிருப்பதாலும், நீலோத்பலம் புஷ்பம் அணிந்திருப்பதனாலும் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். சிவப்பு குடையும், மாணிக்க விசிறியும் கொண்டிருப்பதால் எந்த நோய்கள் உண்டானாலும் உடல் ஆரோக்கியம் சீராகும்.

Makara Sankranti 2018 is one of the most celebrated festivals in India but astrologically, it is the day when Sun begins its movement away from the tropic of Capricorn and towards the northern hemisphere. Sun will start appearing to rise towards North-East for next 6 months.
Recommended