காதலை விட கல்வி ரொம்ப அவசியம்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்- வீடியோ
  • 6 years ago
படிக்கும் காதலிக்கிறதோ, படிக்கிற வயசுல காதலிக்கிறதோ பிரச்சனை இல்லை. ஆனா, அந்த வயசுல படிக்காம சும்மா காதல் தான் கெத்துன்னு நெனச்சு ஊர் சுத்தி காதலிக்கிறது தான் பிரச்சனை. எப்படியோ அடிச்சுப்புடுச்சு காதல் ஃபெயிலியர் ஆகாம பார்த்துக்கிட்டேன். ஆனால், இப்போ வாழ்க்கையே ஃபெயிலியர் ஆயிடுமோன்னு பயமா இருக்கு.

எனக்கும் என் மனைவிக்கும் எந்த சண்டையும், பிரச்னையும் இல்ல. ஆனால், எதிர்காலத்துல நாங்க அடிக்கடி சண்டைப் போட்டுக்கவமோன்னு பயமா இருக்கு.

காதலை விட கல்வி ரொம்ப அவசியம்ன்னு காலம் கடந்த பிறகு தான் தெரிஞ்சுக்கிட்டேன் நான்.

அப்ப எனக்கு 17வயசு நெருங்கிட்டு இருந்துச்சு. +1 படிச்சுட்டு இருந்தேன். பத்தாவது வரைக்கும் பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சதுனால என்னவோ, +1 கோ-ஹெட்ல சேர்ந்ததும். எந்த பொண்ண பார்த்தாலும், இவதான் நம்மக்கானவளான்னு ஒரு சந்தேகம் வரும்.

ஜோதிய பார்த்தப்பவும் எனக்கு அதே சந்தேகம் ரொம்ப வலுவா வந்துச்சு. ஜோதிக்கும், மத்த பொண்ணுகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் இருந்துச்சு. மத்தவங்கள பார்த்தப்ப வராத தைரியம், எனக்கு அவள பார்த்தப்பின்ன வந்துச்சு. அதுனால, இதுதான் லவ்வுன்னும், ஜோதி தான் எனக்கானவன்னு மனசுக்குள்ள லாக் பண்ணிக்கிட்டேன்.

ஆரம்பத்துல ஜோதி என்னோட லவ்வ ஒத்துக்கல. எல்லாரையும் போல ஓவர் ரியாக்ட் பண்ணா. உனக்கெல்லாம் அக்கா, தங்கச்சி இல்லையான்னு சினிமா ஹீரோயினி பேசுற மாதிரி எல்லாம் நிறையா டயலாக் பேசியிருக்கா.

அவள பார்க்கணும்னுங்கிற ஒரே காரணத்துக்காக ட்யூஷன் எல்லாம் சேர்ந்தேன். நான் எப்பவுமே சுமாரான ஸ்டூடன்ட் தான். எவ்வளோ கஷ்டமான சப்ஜெக்ட்டா இருந்தாலும் ஃபெயிலாகாட்டியும் ஜஸ்ட் பாஸாவது ஆயிடுவேன். அப்படி தான் இந்த லவ்லயும் பாஸானேன்.



I Realized Education is More Important Than Love - My Story!
Recommended