கர்நாடகாவில் நாளை மறுநாள் பந்த்... பேருந்து எதுவும் இயங்காது...வீடியோ

  • 6 years ago
மகதாயி நதிநீர் விவகாரத்தை முன்வைத்து, பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுவதிலும், வரும் 25ம் தேதி பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. இந்த பந்த் போராட்டத்திற்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி) ஆதரவு தெரிவித்துள்ளது. பெங்களூர் நகர பஸ் போக்குவரத்து கழகமான பிஎம்டிசியும் ஆதரவு தெரிவிக்கும் என தெரிகிறது. இந்த பந்த் காரணமாக பெங்களூர் உட்பட மாநிலம் முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்துடன் காவிரி நதிக்காக கர்நாடகா மல்லுக்கட்டுவதை போல கோவா மாநிலத்துடன் மகதாயி நதிநீர் பங்கீட்டிலும் மோதுகிறது கர்நாடகா. கர்நாடகாவில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மத்தியிலுள்ள பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுத்து, நதிநீர் பங்கீட்டில் தங்கள் கோரிக்கையை நிலைநிறுத்த கன்னட அமைப்புகளும், மாநிலத்தை ஆளும் காங்கிரசும் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஜனவரி 25ம் தேதியான நாளை மறுநாள் கர்நாடக பந்த் நடத்த 2000த்துக்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் இணைந்து அழைப்புவிடுத்துள்ளன. கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவரான வாட்டாள் நாகராஜ் இந்த அமைப்புகளை இணைத்து பந்த்துக்கு அழைப்புவிடுத்துள்ளார். கர்நாடக அரசும் மறைமுகமாக இதற்கு ஆதரவு அளிக்கிறது என கூறப்படுகிறது.

State-owned Karnataka State Road Transport Corporation (KSRTC) will support the called by Kannada organisations over the Mahadayi river issue. The general public would be severely affected by this as around 23,000 buses may go off-road.

Recommended