சென்னையில் களைகட்டிய காணும் பொங்கல்
  • 6 years ago
பொங்கல்பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமானோர் மக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாதலங்களுக்கு சென்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். காணும் பொங்கல் என்றாலே தமிழர்களின் மனதில் எப்போது ஒரு சந்தோஷம் தொற்றிக்கொள்ளும். உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் இந்த நாளில் கண்டு மகிழ்ந்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்வதில் எப்போதும் தமிழர்களுக்கு தனி ஆர்வம் தான். குறிப்பாகமூத்தவர்களிடமிருந்து ஆசீர்வாதத்துடன் பணத்தையும் வாங்கி அதனை செல்வு செய்வதில் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தனி சந்தோஷம் தான்.

இந்தாண்டு வழக்கம் போல காணும் பொங்கல் காலை முதலே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. வெளியூர்மக்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், சென்னைமக்களுக்கே சென்னை சொந்தம் என்பது போல, உற்சாகத்தோடுதங்களின் சொந்த ஊரை சுற்றி வருகிறார்கள் சென்னைவாசிகள்.

பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பாக பல்வேறு ஏற்பாடுகளும், சிறப்புவசதிகளும் காணும் பொங்கலான இன்று செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு என்று தனியாக சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கடற்கரை, அடையாறு பூங்கா, பாம்புபண்ணை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்டவைகளுக்கென்றே தனியாக சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Chennai is Stunned with the Kannum Pongal Celebration. As it is expected lakhs of people will come to the seashores, so thousands of Police are in the security check
Recommended