சவுதியில் பெண்களுக்கு கால்பந்து போட்டிகளை காண முதல்முறையாக அனுமதி- வீடியோ

  • 6 years ago
சவுதி அரேபியாவில் கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு முதல்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை போல பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்க முடியாது. ஆண்களுடன் பழகவோ, வெளியிடங்களுக்கு செல்லவோ பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அண்மையில்தான் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதுவரை கார் ஓட்டும் பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
விளையாடுவதற்கு கூட சவுதியில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில விளையாட்டுகளை விளையாட அந்நாட்டு பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளும் உண்டு. நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் சவுதி நாட்டு உடையுடன் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியில் பங்கேற்ற போட்டோ வைரலானது நினைவிருக்கலாம்.

Saudi Arabia allows womans to watch football matches. Saudi Arabian women filed into a football stadium in a first for the time at the King Abdullah Sports City in Jeddah.

Recommended