பொங்கல் பானை என்றால் அது நம் பாரம்பரிய மண் பாண்டம் தான்..வீடியோ

  • 6 years ago
மானாமதுரையில், பொங்கல் திருநாளையொட்டி, இல்லங்களில் பொங்குவதற்கு தயாராகும் வகையில், பொங்கல் பானைகள், பல வகைகளில் தயாராகின்றன. மண் பாண்டத்திற்கு பெயர் பெற்ற மானாமதுரையில், கஞ்சிக் கலயம் முதல், கலையம்சம் பொருந்தியகடம் வரை, மண்ணால் தயார் செய்யப்படுகிறது. இங்கு தயாராகும் மண்பாண்டங்கள், உறுதியாகவும், நேர்த்தியாகவும், தரமாகவும் இருப்பதால், வெளி மாவட்டங்களில் வரவேற்பு உள்ளது. சீசனுக்கு தகுந்தவாறு மண்பாண்ட பொருட்கள் தயார் செய்வது, இங்குள்ள தனிச்சிறப்பு.

பொங்கல் திருநாளுக்காக சிவகங்கை மாவட்டத்தில் மண் பானைகள் தயாராகின்றன. மாவட்டத்தில் பூவந்தி, மானாமதுரை, வேதியரேந்தல், சிவகங்கை, பாகனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.

பாரம்பரியத்தை விரும்புவர்களுக்காக மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் கிராமப்புறங்களில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது வீட்டு வாசல் மற்றும் கால்நடை தொழுவம் ஆகியவற்றில் விவசாயிகள் பாரம்பரிய மண் அடுப்புகளில் மண் பானைகள் வைத்து பொங்கல் கொண்டாடுவார்கள். இவர்களை குறிவைத்தே மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.

தற்போது, பொங்கல் திருநாள் நெருங்குவதால், அதற்காக, பொங்கல் பானைகள், அடுப்புகள் தயாராகி வருகின்றன. ஐந்து கிராம கண்மாய்களில் உள்ள மண்ணை கலவையாக்கி, ஆறாவதாக வைகை ஆற்றுமணலை உறுதுணையாக்கி, அரைத்து மாவாக்கி, தரையில் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பானையாக தயாரிப்பதற்கு இசைவாகும் வரை, காலால் மிதித்து, கையால் பிசைந்து பக்குவப் படுத்துகின்றனர்.


As the Pongal festival is fast approaching, attractive pots have arrived on the streets of Manamadurai.

Recommended