அதிமுக முன்னால் ஒன்றிய செயலாளர் வெட்டி படுகொலை- வீடியோ
  • 6 years ago

வேலூர் மாவட்ட அதிமுக முன்னால் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர்மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் இவர் அதிமுகவில் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தார் இவர் நேற்று இரவு மாநகராட்சி அமைத்துள்ள காய்கடை பகுதியில் பைனான்ஸ் கூடுத்த பணத்தை வசூல் செய்துகொண்டு இருந்த போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6பேர் கொண்ட கும்பல் திடிரென ஸ்டாலினை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர் வெட்டு பட்ட ஸ்டாலின் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஸ்டாலினின் உடலைகைபற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலை செய்துவிட்டு தப்பிய 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்
Recommended