2017ன் பெஸ்ட் கிரிக்கெட் அணி எது?- வீடியோ

  • 6 years ago
கடந்த பத்து வருடங்கள் கிரிக்கெட் உலகிற்கு சிறந்த வருடங்கள் என்று கூட சொல்லலாம். 99 செஞ்சுரி அடித்துவிட்டு 100வது செஞ்சுரி அடிக்க சச்சின் ஒருவருடம் எடுத்த காலம் போய் எல்லா போட்டியிலும் செஞ்சுரி அடிக்கும் கோஹ்லியின் காலம் வந்துவிட்டது.

எல்லா அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் புதிய சாதனை படைக்கிறது. எப்போதும் போல இந்த வருடமும் சில முக்கிய அணிகளே டாப் 5 இடத்தில் இருக்கிறது.

நல்ல பார்மில் இருந்த இலங்கை, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுக்கு மட்டும் இந்த வருடம் மிகவும் மோசமான வருடம் ஆகும். இந்தியா விஸ்வரூபம் எடுத்ததில் தொடங்கி ஆஷஸ் போட்டியில் நடக்கும் களேபரங்கள் வரை அனைத்தும் இந்த பட்டியலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

உலகிலேயே டி-20 போட்டியில் இப்போது சிறந்த அணி எது என்று கேட்டால் கூகுளை பார்க்காமல் பாகிஸ்தான் அணி என்று சொல்லிவிடலாம். இந்தியா எவ்வளவு முயன்றும் இந்த வருடம் டி-20 தரவரிசையில் பாகிஸ்தான் அணியை முந்த முடியவில்லை. முக்கியமாக எப்போதும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற போட்டிகளில் இந்தியா எளிதாக பாகிஸ்தானை வீழ்த்திவிடும். ஆனால் இந்த வருட சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தான் 338 ரன்கள் எடுத்து 180 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக கோப்பையை

இந்த இடத்திற்கு நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் கடுமையாக போட்டியிட்டது என்று கூட சொல்லலாம். இரண்டு அணிகளுமே இந்த வருடம் சமமான அளவிற்கு போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஆனால் நியூசிலாந்து இந்திய அணியிடம் மட்டுமே மோசமாக தோற்றது. தற்போது இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது. அந்த வகையில் நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து அணியே சிறந்த தேர்வாகும். ஐசிசி தரவரிசையில் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 5 வது இடமும். டெஸ்டில் 4வது இடமும், டி-20ல் 2வது இடமும் பிடித்து இருக்கிறது.

Recommended