உச்சநீதிமன்றத்தையே உலுக்கிய நீதிபதி கர்ணன் சிறைத்தண்டனை பெற்ற ப்ளாஷ்பேக் !- வீடியோ

  • 6 years ago
2017ம் ஆண்டின் இறுதியில் இருக்கும் நமக்கு இந்த ஆண்டில் நடந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சம்பவங்களின் தொகுப்புகளை வழங்கி வருகிறது தமிழ் ஒன் இந்தியா. தமிழக அரசியலில் பல பரபரப்புகள் இருந்தாலும் நீதித்துறையிலும் இந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சி.எஸ். கர்ணன். தன்னுடைய தீர்ப்புகள் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவு போட்டவர் இறுதியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்நத்தம் கிராமத்தில், 1955-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி சுவாமிநாதன்- கமலம் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் பி.எஸ்சியும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார் கர்ணன்.

பின்னர் தமிழக பார் கவுன்சிலில் பதிவுசெய்துகொண்ட அவர், சிவில் வழக்குகளில் வாதாட ஆரம்பித்தார். பிறகு சென்னைக் குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் அரசுக்கு வழக்கறிஞராகவும் ஆஜராகி வந்தார். கர்ணனுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். வழக்கறிஞராக சிறப்பாக செயலாற்றி வந்த கர்ணனை 2009-ஆம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. கங்குலியின் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பரிந்துரைத்தார். ஆனால், 2011-ஆம் ஆண்டிலேயே சக நீதிபதிகளுடன் இவருக்கு மோதல் வெடித்தது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தான் த

Justice Karanan who is the first to get punishment for 6 months of jail from Supreme court for contempt of court . Here is the full story of for what he got punishment.

Recommended