அஸ்வின், ஜடேஜா சண்டை.. யார் ஓப்பனிங்.. இந்திய அணிக்கு தொல்லையாக இருக்கும் ஐந்து விஷயங்கள்....வீடியோ

  • 6 years ago
தற்போது உலகிலேயே மிகவும் சிறந்த கிரிக்கெட் அணியாக இந்தியா இருக்கிறது. எந்த தொடர் நடந்தாலும் அதை அசால்டாக தூசு போல் தட்டிவிடுகிறது. இந்த நிலையில் இந்திய அணி வரும் ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கிரிக்கெட் தொடர் ஆட இருக்கிறது. அந்த நாட்டில் நடக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானது ஆகும்.

தற்போது இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு 5 விஷயங்கள் பெரிய தடையாக மாறியுள்ளது. இந்த 5 விஷயங்களும் இந்திய அணியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு காலத்தில் இந்திய அணிக்கு சரியான ஓப்பனிங் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் தற்போது நிறைய ஓப்பனிங் வீரர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். தற்போது டெஸ்ட் போட்டிக்கு தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் என மூன்று ஒப்பனர்கள் இருக்கிறார்கள். இதில் யாரை இறக்கிவிடுவது என தெரியாமல் தற்போது கோஹ்லி குழம்பிக் கொண்டு இருக்கிறார். யார் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சமாளிப்பார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐந்தாவது இடத்தில் இறங்கும் ரஹானேதான் தற்போது இந்திய அணியின் தலைவலியாக இருக்கிறார். நல்ல வீரராக வருவார் என்று எதிர்பபார்க்கப்பட்ட இவர் இந்தியாவில் நடக்கும் போட்டியிலேயே சொதப்பிக் கொண்டு இருக்கிறார். கடைசியாக ஆடிய ஐந்து போட்டிகளில் இவர் 10, 1, 2, 0, 4 என்று மிகவும் மோசமாக ஆடியுள்ளார். ஆனால் இவர் பவுன்சர் பந்துகளில் சரியாக விளையாடுவார் என்பதால் தென்னாபிரிக்க பந்துகளை சமாளிப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனையாக இருப்பது ஸ்லீப் மட்டுமே. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய ஸ்லீப்பர்கள் மிகவும் மோசமாக சொதப்பினார்கள். கோஹ்லி தொடங்கி புஜாரா, அஸ்வின் அவரை அனைவரும் வரிசையாக கேட்ச்களை விட்டார்கள். இதுதான் தற்போது இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

டோணி இந்திய அணியின் கேப்டனாக இருந்த வரை 4 பவுலர்களை மட்டும் பயன்படுத்தி வந்தார். ஆனால் கோஹ்லி அணிக்கு வந்தவுடன் 5 பவுலர்களை பயன்படுத்த தொடங்கினார். இந்திய பிட்ச்சில் இது நன்றாகவே கை கொடுத்தது. ஆனால் கடைசியாக நடத்த டெஸ்ட் தொடரில் நான்கு பவுலர்களுடன் இந்தியா களம் இறங்கியது. தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் மீண்டும் 5 பவுலர்களுடன் செல்லும் இந்தியாவின் யூகம் சரியாக நிறைவேறுமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் தற்போது அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் இடையில் சிறிய உரசல் ஏற்பட்டு இருக்கிறது. அஸ்வின் இந்திய மண்ணில் மிகவும் சிறப்பாக பந்து வீசுவார். ஆனால் வெளிநாட்டில் சரியாக பந்து வீசுவது இல்லை. அதற்கென்று அஸ்வினை உட்கார வைக்கவும் முடியாது. இதனால் அஸ்வினா, ஜடேஜாவா என்ற குழப்பம் தற்போது கோஹ்லிக்கு உருவாகி இருக்கிறது.

Recommended