வேட்பு மனு தாக்கலுக்கும் லேட்டு தானா... கடைசி டோக்கன் ஜெ. தீபாவுக்குத் தானாம்!- வீடியோ
  • 6 years ago
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நேரத்தில் வந்ததால் ஜெ. தீபாவிற்கு கடைசி டோக்கனான 91வது டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள். திமுக, அதிமுக, நாம்தமிழர் கட்சி, தினகரன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமையே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். திடீரென சனிக்கிழமை சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்த நடிகர் விஷால், பாஜக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.

ஏற்கனவே நேரம் வாங்கி இருந்ததால் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் 1 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டுச் சென்றார். எனினும பாஜக, பகுஜன் சமாஜ் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் முன்பு எதிர் எதிர் முழக்கங்களையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஷால் வந்தால் வரிசையில் காத்திருந்து தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதோடு மறியலும் செய்தனர்.

Jayalalitha's nephew J.Deepa received the last token for filing nominations in the RK Nagar election as she came late to election office.
Recommended