மக்கள் உஷாராகிட்டாங்க..இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, கோக கோலா திண்டாட்டம்- வீடியோ

  • 7 years ago
இந்தியாவில் முதல் முறையாக கோககோலா நிறுவனம் சங்கடத்தை உணர ஆரம்பித்துள்ளது. சுமார் 200-250 பேரை வேலையை விட்டு நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி கூறுகிறது. அதுகுறித்த விவரம் இதுதான். இந்தியாவின் முன்னணி பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளில் ஒன்று, கோககோலா நிறுவனம். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சீனியர் மற்றும் மத்திய தர அதிகாரிகள் சுமார் 250 பேர் இப்போது வேலையிழக்க உள்ளனர். நிதிப்பிரிவு, மனிதவள பிரிவுகளில் பணியாற்றியவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கார்பொரேட் அலுவலகங்களின் கிளைகளை குறைத்துக் கொண்டு விற்பனை மற்றும் சப்ளை சங்கிலியை பலப்படுத்த கோககோலா திட்டமிட்டுள்ளது. எனவே குறைந்த சம்பளத்தில் உள்ள பணியிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
கோககோலாவின் இந்த முடிவுக்கு காரணம், அதன் உற்பத்தி மையங்கள் பலவும் கடந்த இரு வருடங்களில் மூடப்பட்டு வருவதுதான். புதிதாக உற்பத்தி மையங்களை அமைக்கும் இடங்களில் உள்ளூர் மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

In Coca-Cola's history in India, jobs of around 200-250 senior and middle-level executives may be get pink slip.

Recommended