2வது மனைவிக்கு சீட் கேட்டா மருமகளுக்கா தர்றீங்க..வீடியோ

  • 7 years ago
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக தரப்பில் ஏகப்பட்ட குட்டி கலாட்டாக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அங்குள்ள மூத்த எம்.பி. ஒருவர் தனது 2வது மனைவிக்கு சீட் கேட்டார். ஆனால் கட்சி மேலிடமோ அவரது மருமகளுக்கு சீட் கொடுத்து எம்.பிக்கு ஆப்படித்து விட்டது. இதனால் அந்த எம்.பி. கடுப்பாகியுளள்ளார். பன்ச்மஹால் தொகுதி லோக்சபா உறுப்பினர் பிரபாத்சின் செளகான். இவர் நீண்டகால எம்.பி. பாஜகவின் மூத்த தலைவரும் கூட. இவருக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். 2வது மனைவி பெயர் ரங்கேஸ்வரி. சட்டசபைத் தேர்தலில் காலோல் தொகுதியில் ரங்கேஸ்வரிக்கு சீட் வாங்கி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் செளகான்.

ஆனால் அவரது முதல் மனைவிக்குப் பிறந்த பிரவீன்சின் செளகானின் மனைவியான சுமன் செளகானுக்கு சீட் கொடுத்து விட்டது.
கட்சி மேலிடம் தனது 2வது மனைவிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டு மருமகளுக்கு சீட் கொடுத்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் செளகான். இதுதொடர்பாக கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு அவர் காட்டமான கடிதம் எழுதியுள்ளார்.

Gujarat BJP MP Prabhatsinh Chauhan is angry over the seat denial to his 2nd wife Rangeshwari chauhan, in Kalol assembly seat. The party has given the seat to his daughter in law Suman.

Recommended