மீண்டும் மழை... புதுசா 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள் அடுத்த வாரம் உருவாகிறது!- வீடியோ

  • 7 years ago
வங்கக்கடலில் அடுத்த வாரம் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் இதுவரை வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவானது. முதலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சுமார் 10 நாட்கள் மழை பெய்தது. குறிப்பாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்ததால் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை ஓய்ந்தது.

பின்னர் 3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. ஆனால் இதனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் பெரும்பாலான மழை கடலிலேயே பெய்தது.
பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடதிசையில் நகர்ந்து ஒடிஷா நோக்கி சென்று விட்டது. இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைந்து தற்போது மழை முற்றிலும் நின்றுவிட்டது.

Two New low depressions going to form in Bay of Bengal in next week said Indian Meteorological center. Tamilnadu coastal districts will get heavy rain again due to this depressions said Indian meteorological center

Recommended