கேரளா பாப்பாவுக்கு ஆயுசு கெட்டி...7மணி நேரத்தில் 516 கிமீ பறந்த ஆம்புலன்ஸ்- வீடியோ

  • 6 years ago
கேரளாவில் ஒரு மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற 516 கிமீ தூரத்தை 7மணி நேரத்தில் கடந்துள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர். குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் உதவிய போலீசாருக்கும் பாராட்டுகள் குவிகிறது. கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு மாத குழந்தை ஒன்று இதய நோய் காரணமாக பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் உடல் நிலை மோசமானதால் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா மருத்துமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 10 மணி நேரத்திற்குள் அங்கு அனுமதித்தால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் குழந்தையின் பெற்றோர் கலக்கமடைந்தனர். 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை காப்பாற்ற வேண்டுமே என்று கடவுளை வேண்டினர்.

A Kerala ambulance driver transporting an ailing month-old infant.This ambulance driver covered 516km in 7 hours to save a baby's life.

Recommended