தோனியை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கர் கொடுத்த பதிலடி- வீடியோ

  • 6 years ago
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பாண்டியாவை குறை சொல்லாமல் ஏன் தோனியை மட்டும் ஏன் குறை சொல்றீங்க என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பி 40 ரன் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று புகழ்பெற்ற மகேந்திர சிங் டோனி, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.

மேலும், இந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்ற தோனி 37 பந்துகளில் 49 ரன் குவித்தார். முதல் 20 பந்துகளுக்கு 17 ரன் மட்டுமே அடித்திருந்தார் தோனி.
இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 197 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.

ind vs nz 2017 sunil gavaskar comes out in support of scrutinized ms dhoni

Recommended