புதுவை முதலமைச்சர் பேட்டி- வீடியோ

  • 7 years ago
மத்திய அரசு ரேஷன் கார்டுகளுக்கு வழங்கி வந்த மண்ணெண்ணெய்யை நிறுத்தி வைத்துள்ளதால் மழை காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் பொதுமக்கள் விளக்குகள் இல்லாமல் சிரமப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுவை நகரில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நவீன மோட்டார் இயந்திரம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். எதிர் வரும் மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க வாய்கால்கள் தூர்வாரி தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுப்பட்டு வருவதாக தெரிவித்தார். மத்திய அரசு ரேசன் கார்டுகளுக்கு வழங்கி வந்த மண்ணெண்ணெய்யை நிறுத்தியதால் மின்சாரம் தடைபடும் நேரத்தில் விளக்கு இன்றி பொதுமக்கள் அவஸ்தைபட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Dis : The Chief Minister said that the government has stopped kerosene delivery to the ration cards and the public is not in the light of the lights at the time when electricity is cut off.

Recommended