என்னங்க சொல்றீங்க.. "கிச்சடி" இந்தியாவின் தேசிய உணவா??- வீடியோ

  • 7 years ago
தேசிய உணவாக கிச்சடியை மத்திய அரசு அறிவிக்கவே இல்லை என மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் நாளை முதல் 5-ந் தேதி வரை "உலக உணவு- இந்தியா 2017" கருத்தரங்கம் நடைபெறுகிறது. மத்திய உணவுத் துறை அமைச்சகாமும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்துகின்றன.இக்கருத்தரங்கில் 200 சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நாளை மறுநாள் மாலை இக்கருத்தரங்கில் பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் உலக சாதனைக்காக 800 கிலோ கிச்சடியை தயாரிக்க உள்ளார்.இதையடுத்து இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை மத்திய அரசு அறிவித்துவிட்டதா? என்கிற சர்ச்சையும் வெடித்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், சாதனைக்காக மட்டுமே கிச்சடி சமைக்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார். அதாவது கிச்சடி இந்தியாவின் தேசிய உணவு என்ற பெயரில் அங்கு சமைக்கப்படவில்லை என்பதைத்தான் மத்திய அமைச்சரின் இந்த பதிவு விளக்குவதாக புரிந்து கொள்ளப்படுகிறது.

Union Minister of Food Processing Harsimrat Kaur Badal clarified khichdi was only selected for the World Food India event in a bid to popularise it.

Recommended