மெர்சல் விவகாரம், தீபா பேட்டி -வீடியோ

  • 7 years ago
மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்க கூறுவது ஜனநாயகதிற்கு எதிரான செயல் என்றும் இது மத்திய அரசின் சர்வாதிகார போக்கை வெளிகாட்டுவதாக தீபா தெரிவித்துள்ளார்.

வேலூர் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் சார்பில் கண்டன பொது கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அக்கட்சியின் பொது செயலாளர் தீபா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு செயல்படுவதை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெளிவுபடுத்தியுள்ளதாக கூறினார். மேலும் மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது சர்வாதிகார போக்கை வெளிகாட்டுவதாக தெரிவித்தார்.

In a public meeting, at Vellur District, MGR AMMA DEEPA Party’s General Secretary Deepa spoke about Mersal Film issue.

Recommended