இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்... | weekly news
  • last year
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி வெளியிட்டார். அந்த ஆவணங்கள் போலி யானவை என்று திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை பொது மன்னிப்பு கேட்காவிட்டால் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய அந்த நோட்டீஸூக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி இருக்கும் அண்ணாமலை, “சட்டத்துக்குப் புறம்பாகவோ, அவதூறாகவோ நான் எதையும் கூறவில்லை. திமுகவின் சொத்துகள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொது வெளியில் இருந்து எடுக்கப்பட்டதுதான். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதில் வெளியிட்ட உண்மைகள், புள்ளிவிவரங்களை மக்கள் தெரிந்து கொள்வதை தடுக்கும் முயற்சியாகவும், எனது குரலை ஒடுக்குவதற்காகவுமே திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுகவினர் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் அரசியல்வாதிகளால் மட்டுமல்ல, பொதுமக்களாலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்துவதற்காக இந்த ஆவணங்களை வெளியிடவில்லை. பொதுநலனுக்காக மட்டுமே திமுகவினரின் முறைகேடுகள் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, திமுக கேட்டபடி 500 கோடி ரூபாய் இழப்பீடு தரமுடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது. இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Recommended