அல்லா என்னை இப்படி இருக்குமாறு படைத்திருக்கிறார். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ - சுலைமான்

  • last year
நித்தம் வளரும் சுலைமான்: #உலகசாதனை க்கான உயரம் 9.6 அடி.
வடக்கு கானாவின் குக்கிராமத்தில் பிறந்த #சுலைமான், பள்ளிப் படிப்பை முடித்ததுமே அருகிலுள்ள நகரங்களுக்கு பிழைக்கச் சென்றார். வாகன ஓட்டுநராக வேண்டும் என்பது அவரது சிறுபிராயத்து கனவு. ஆனால் அவர் அமர்ந்து ஓட்டும் வாகனம் வாகன சந்தையில் வாய்ப்பில்லை என்பதை விரைவில் உணர்ந்தார். ஏனெனில் அவர் திடீரென அதீதமாய் வளர ஆரம்பித்தார்.

சுலைமானை ஆராய்ந்த மருத்துவர்கள் இது மரபு தொடர்பான கோளாறு என்றும், மூளை அறுவை சிகிச்சை செய்தால் பலன் கிடைக்க வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தார்கள். சுலைமானிடம் அந்தளவுக்கு வசதி இல்லையென்ற போதும் தனது உயரத்தை எளிதாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். ‘#அல்லாஹ் என்னை இப்படி இருக்குமாறு படைத்திருக்கிறார். அதனை நான் அவ்வாறே ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சகஜமானார்.

Recommended