#cithiraitv #அருப்புகோட்டை தேசிய அறிவியல் தினம், மகளிர்தினம் கிரீன்விஸ்டம் பள்ளி அறிவியல் கண்காட்சி

  • 2 years ago
#cithiraitv #விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேசிய அறிவியல் தினம் & மகளிர்தினத்தை முன்னிட்டு கிரீன்விஸ்டம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி சி.வி.ராமன் முகமூடி அணிந்து மாணவர்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டில் பிறந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.வி.ராமன் பிப்ரவரி 28,1928ல் ராமன் விளைவு என்னும் அறிவியல் கூற்றை கண்டுபிடித்தார்.ராமன் விளைவை கண்டுபிடித்ததன் நினைவாக பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கிரீன் விஸ்டம் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த அறிவியல் கண்காட்சியை நகர்மன்றத்தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் துவக்கி வைத்தார். மேலும் இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்களது படைப்புகளை சி.வி.ராமன் முகமூடி அணிந்து காட்சிப்படுத்தி விளக்கினர்.
கலங்கரை விளக்கம், சோலார் விளக்குகள், நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.வி.ராமன் வாழ்க்கை குறிப்பு அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டு கண்டுகளித்தனர்.

Recommended