முட்டையிட்டு நகர முடியாமல் திணறிய ஆமை; கடலோர போலீசார் உதவியுடன் மீட்பு

  • 2 years ago
கன்னியாகுமரி சுற்றுலா பகுதியில் வாவுத்துறை கடற்கரையில் கடலில் இருந்து கரைக்கு ஒரு ஆமை வந்தது. இந்த ஆமையானது கடற்கரை மணலில் 108 முட்டைகளையிட்டது. பின்னர் கடலுக்கு செல்ல முயற்சித்த போது ஆமையால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதனை கவனித்த வாவுத்துறை மீனவ கிராம மக்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்கள். தகவல் அறிந்து வந்த கடலோர போலிஸார் மீனவர்கள் உதவியுடன் ஆமையை பாதுகாப்பாக கடலுக்குள் சென்று விட்டார்கள்.

Recommended