#cithiraitv #காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

  • 2 years ago
#cithiraitv #கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பரிசுப்பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், எதுவும் கிடைக்காததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் திடீரென்று அதிமுக அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறையினரிடம் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சோதனையில், எதுவும் கிடைக்காததால் கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் மற்றும் காவல் துறையினர் அலுவலகத்தை விட்டு உடனடியாக திரும்பி வேகமாக சென்றனர். அவரைத் தொடர்ந்து அதிமுகவினர் பின்தொடர்ந்து எதற்காக எங்கள் அலுவலகத்தில் வந்திருக்கிறீர்கள். திமுக அமைச்சர் ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுக்கிறார். நாங்கள் புகார் தருகிறோம் உங்களால் தடுக்க முடியுமா எனக் கேள்வி கேட்டதால் காவல்துறையினர் திணறினர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பின் போது 2 லட்சம் ஹாட் பாக்ஸ் மற்றும் ஓட்டுக்கு 2000 ரூபாய் ஆளும் திமுக கட்சி கொடுத்து வருகின்றனர். கரூரிலும், கோயம்புத்தூரிலும் பண மழை கொட்டுகிறது அதை எந்த தேர்தல் பறக்கும் படை பிடிக்கவில்லை. கோவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ததை போல் கரூரிலும் தேவையற்ற வதந்திகளை பரப்பி கைது செய்ய திமுகவினர் முயற்சி செய்கின்றனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டில் ஒரு அதிமுக வேட்பாளரை ஏற்கனவே 15 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியது போல் மற்ற வேட்பாளர்களையும் விலைக்கு வாங்க பார்த்தார்கள் எவரும் போகாததால் அனைத்து அதிமுக வேட்பாளர்களையும் மிரட்டி தேர்தல் வேலை பார்க்கவிடாமல் செய்ய முயற்சி செய்கின்றனர். திருட்டு திமுக கரூரில் திருட்டு தனமாக வெற்றி பெற முயற்சி செய்கின்றனர். கரூர் மண்டல தேர்தல் பொறுப்பாளர் மந்திராச்சலம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தமாட்டார். அவர் திமுக மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார் தேர்தல் வெற்றி நியாயமாக இருக்காது என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

உடன் அவைத்தலைவர் காளியப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி செயலாளர் சுப்பிரமணி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மெம்பர், கரூர் வழக்கறிஞர் அணி தலைவர் மாரப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ், கரூர் மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Recommended