#cithiraitv #கோவை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மாட்டுப் பொங்கல் பண்டிகை |

  • 2 years ago
#cithiraitv #கோவை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது…

பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளைப் போற்றும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. இதன்படி,கோவை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகள் சீவி விட்டு வண்ணம் பூசி அத்துடன் தொழுவத்தில் பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள். இந்த வருடம் பொங்கல் விழா குறித்து விவசாயிகள் கூறுகையில்,விழாவில் நவதானியம், தயிர், பால், இளநீர் உட்பட ஏழு வகையான பொருட்களை குளம் போல் வெட்டி அதில் இட்டு. மாடுகளை வலம் வர வைத்து பட்டி மிதிக்க வைத்து, மாடுகளுக்கு உணவாக, பொங்கல் படையலிடப்படும். மாட்டுப்பொங்கல் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடி வந்த நிலையில்,தற்போது கொரணா என்பதால் நாளை மாடுகளை கோவிலுக்கு அழைத்து செல்ல முடியாத சூழலில் இன்றே தோட்டங்களில் தாங்கள் மாடுகளுக்கு சிறப்பு செய்கிறோம் எனவும் தெரிவித்தனர்.

Recommended