#cithiraitv #உலக பொதுமறையை உலகிற்கு எடுத்துரைத்த திருவள்ளுவர் நாள் இன்று கருவூர் திருக்குறள் பேரவை மலர் மாலை அணிவித்து புகழாரம்

  • 2 years ago
#cithiraitv #உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் தினம் இன்று… கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, திருக்குறள் நூல்களை இலவசமாக கொடுத்து கெளரவித்த கருவூர் திருக்குறள் பேரவை

உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் வாழ்வியலுக்கு தேவையான 1330 திருக்குறள்களை எழுதி உள்ள திருவள்ளுவர், அதை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்று பகுதிகளாக பிரித்தும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என 113 அதிகாரங்களையும் பிரித்து அழகாக விவரித்து உள்ளார். திருக்குறள் உலகப் பொதுமறையாக திருக்குறள் கருதப்படுகிறது. இந்த திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக உலகத்தமிழர்களால் கொண்டாடப்படும் இந்த திருவள்ளுவர் தினத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பலர் திருவள்ளுவர் தினத்தினை கொண்டாடி வரும் நிலையில், கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. கருவூர், திருக்குறள் பேரவை சார்பில் பேரவை அலுவலகத்தில் திருவள்ளுவர் தினத்தினையொட்டி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருவூர் திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்குறளின் சிறப்பை விளக்கி வள்ளுவம் வாழ்வியல் ஆனால் வருங்காலம் சிறப்பாக அமையும் என்றதோடு, திமுக அரசு தான் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவரை போற்றும் வகையில் கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைத்து உலக வரலாற்றில் திருவள்ளுவரின் பெருமையை மேலும் பதிவு செய்துள்ளது பெருமைக்குரியது என்றும் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தெரிவித்ததோடு., கரூரில் திருவள்ளுவர் சிலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும், இளைஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் கருவூர் திருக்குறள் பேரவை இலவசமாக திருக்குறள் புத்தகங்களை இலவசமாக கொடுத்து கெளரவித்தது. இந்நிகழ்ச்சியில், புரவலர் ராமசாமி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார் நன் செய் புகழூர் அழகரசன் குழந்தை களுக்கு திருக்குறள் நூல் வழங்கினார் சீனிவாசபுரம் ரமணன், பேனா நண்பர் பேரவை திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். மேலும், ரவிக்குமார், நாகேந்திர கிருஷ்ணன், சதாசிவம் லெட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். யோகா வையாபுரி அவர்கள் திருக்குறளின் சிறப்பு குறித்து எடுத்துரைத்து பாடலாக பாடி மகிழ்ந்தார்.

Recommended