#cithiraitv #மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கலெக்டர் அதிரடி பேட்டி |

  • 2 years ago
வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் 16ம் தேதி நடைபெற இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகின்ற ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு பொதுமுடக்கம் காரணமாக ஜனவரி 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவிப்பு.

மதுரை மாவட்டத்தில் தைப் பொங்கலை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு திருவிழாக்கள் தமிழக அரசு விதித்துள்ள கரோனா நோய் தொற்றுக்கான கட்டுப்பாடுகளுடன் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி உழவர் திருநாள் அன்று நடைபெறுவதாக இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை பொது நடக்கும் என்பதால் அடுத்த நாள் அதாவது ஜனவரி 17ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் அவர், போட்டியில் பங்கேற்க வருகின்ற ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்கள் தங்களது பெயர்களை இணையம் வழியாக இன்று மாலை 3 மணியிலிருந்து நாளை மாலை 5 மணி வரை https://t.co/35Qlz1rfaE என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கூறியுள்ளார். மேலும் இந்த போட்டிகளில் பார்வையாளர்களாக உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க முடியும் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை. மற்றபடி இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

Recommended