#chithiraitv #சந்திரபாபு நாயுடு பேசியது ஒன்றும் புதிதல்ல, அதிரடி காட்டிய காங்கிரஸ் எம்.பி |

  • 2 years ago
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியலில் கிங் மேக்கராக இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் முதலமைச்சராக தான் சட்டசபைக்குள் நுழைவேன் என்று நேற்று அவர் கூறியுள்ளது புதிதல்ல ஏற்கனவே பல பேர் இதுபோன்று கூறியுள்ளனர்.
ஆனால் சந்திரபாபு நாயுடு சட்டசபையில் அவமானப்படு படுத்தப்பட்டார் என்றுதான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மத்திய அரசாக இருந்தாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இருவருமே ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மக்கள் பணி சிறப்பாக நடக்கும். தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே
பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது...
புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் பேட்டி

புதுக்கோட்டை கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் 15 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்டத்தின் மிகப்பெரிய கம்மியாக உள்ள கவிநாடு கண்மாய் நிரம்பியது திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்., திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபாதை கட்டணம் 50 ரூபாய் உள்ளது., இன்னும் ஒரு வார காலத்திற்குள் 10 ரூபாயாக குறைக்கப்படும் என்று ரயில்வே வாரியம் உறுதியளித்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கருவேப்பிலை ரயில்வே கேட் மற்றும் திருப்பூர் ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைப்பதற்கு தமிழக அரசு 50 சதவீத நிதி வழங்கும் என்ற உத்திரவாத கடிதத்தை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது ரயில்வே வாரியம் விரைவில் இது குறித்து முடிவு எடுத்து ஒரு வருட காலத்திற்குள் பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சபதம் மற்றும் கண்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் சட்டசபைக்குள் முதல்வராக தான் நுழைவேன் போக மாட்டேன் என்று கூறுவது முதல் தடவை அல்ல இது போன்று பல மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். மாநிலத்துக்கு மாநிலம் மாநிலக் கட்சிகளின் பிரச்சினைகள் வேறுபடும். சந்திரபாபு நாயுடு ஏற்பட்டுள்ள சங்கடங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை ஆகியவற்றை கொண்டு சந்திரபாபு நாயுடு இதுபோன்ற அறிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு அனுபவமுள்ள முதலமைச்சர் என்பதற்கும் அவர் அரசியலில் கிங் மேக்கராக இருந்தார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. அவர் சட்டசபைக்குள் அவமானப்படுத்தப்பட்டாரா புண்படுத்த பட்டாரா முன்னாள் முதல்வர் என்கிற முறையில் அவருக்கு உரிய இடமும் நேரமும் வழங்கப்படவில்லை யா இதுதான் அவரது முடிவிற்கு காரணமாக இருந்திருக்கும். ஆனால் ஜனநாயக ரீதியாக பார்க்கும்போது ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் பாராளுமன்றத்திலும் இருக்க வேண்டும் சட்டமன்றத்திலும் இருக்கவேண்டும். இதுதான் ஜனநாயகத்திற்கு நல்லதாக இருக்கும். மோடியை யாரும் பின்பற்றக் கூடாது. மூன்று வேளாண் சட்டங்களை பின்வாங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. ஓராண்டு கால போராட்டத்தில் பல உயிர்கள் மாண்டு உள்ளது பலர் புன் படுத்தப்பட்டுள்ளனர். அப்போது மத்திய அமைச்சர்களும் தமிழக முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் அந்த சட்டத்தை ஆதரித்து பேசினார்கள். அந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் பேசினார்கள் என்றார்

Recommended