#chithiraitv #முல்லை பெரியாறு அணை ஒரு பிரச்னையே கிடையாது: சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி |
  • 2 years ago
முல்லை பெரியாறு அணை ஒரு பிரச்னையே கிடையாது: சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி



தேனி:''முல்லை பெரியாறு அணையில் விதிமீறல் இல்லை. இது ஒரு பிரச்னையே கிடையாது,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
தேனியில் அவர் கூறியதாவது:கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். ரேஷன் கடைகளில் பனை வெல்லம் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை பணிகள் முடிந்துள்ளது. விரைவில் விலை நிர்ணயித்து அமலுக்கு வரும். முல்லை பெரியாறு அணை 5 மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வளிக்கிறது. தமிழகத்துக்கு 999 ஆண்டுகள் ஒப்பந்தம் உள்ளது. 142 அடிக்கு நீர்தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து பலமாக இருப்பதாக தெரிவித்தனர். தற்போது 142 அடி நீர் தேக்கப்படுகிறது. 152 அடிக்கு உயர்த்த கோரிக்கை உள்ளது. இது நிறைவேற்றப்படும்.அணையில் நீர்தேக்க 'ரூல்கர்வ்' விதிமுறை பின்பற்றப்படுகிறது. யாரும் விதிமீறல் செய்யவில்லை. அணை விவகாரம் ஒரு பிரச்னையே கிடையாது. அரசியல் ஆதாயத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அணையில் நமக்கு இருக்கும் உரிமை பற்றி நாமே கேள்வி எழுப்ப கூடாது. எப்போதும் அணை நமக்குதான். உச்சநீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும், என்றார்.
Recommended