#BOOMINEWS | கோவை அருகே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர் |

  • 3 years ago
கோவை மாவட்டம், இடையர்பாளையம் அடுத்த தேவாங்க நகர் பகுதியில், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்,

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த தேவாங்க நகர் பகுதயில், தமிழ்நாடு ஊரக மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் சார்பில், முதல் மற்றும் இரண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும், சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியின் மூலமாக சுமார் 1100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முதல், மற்றும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி இன்று செலுத்த பட்டது, காலை முதலாக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு டேக்ட் அமைப்பின் சார்பில், டோக்கன் கள் விநியோகம் செய்யபட்டு, 11 மணிக்கு மேலாக அனைவருக்கும் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தபட்டது, முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி, அனைவரின் ஆதார் எண்களையும் பதிவு செய்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்டது மேலும் முகாம் மருத்துவர், தயால் தலைமையில் அனைவருக்கும் தடிப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது, அதில் முதல்முறையாக தடிப்பூசி போட்டு கொள்பவர்கள் பயப்படவோ, பதட்டபடவோ தேவையில்லை நாம் அன்றாடம் காய்ச்சல், தலைவலிக்கு ஊசி போட்டு கொள்ளும் ஒரு முறைதான், கொரோனா தடுப்பூசிகளின் முறை எனவும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சிலருக்கு இரவில் காய்ச்சல், தலைவலி ஏற்படலாம் ஆனால் யாரும் பயப்பட வேண்டாம், பாராசிட்டம்மல் மாத்திரைகளை காய்ச்சல் அடிப்பவர்கள் மட்டும் எடுத்து, கொள்ளுங்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசிகளை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியானது, டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் தலைமையிலும், திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணகி முன்னிலையிலும், மருத்துவர் தயால் முன்னிலையிலும் நடைபெற்றது மேலும் இந்த நிகழ்ச்சியில், டேக்ட் அமைப்பின் பொருளாளர் லீலா கிருஷ்ணன், டேக்ட் அமைப்பின் நிர்வாகிகள் பாரதி ரவி, பிரதாப், மற்றும் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்திய செவிலியர்கள் வீரராகவி மற்றும் மஹாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Recommended