நாங்க நடந்துகூட போய்க்கிறோம் அனுமதிச் சீட்டு மட்டும் குடுங்க..! People suffers due to #lockdown

  • 4 years ago
போர்வை, மெத்தை விரிப்பு, பாய் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக வந்து, கொரோனா ஊரடங்கில் சிக்கிக்கொண்ட வடமாநிலத் தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலத்துக்குச் செல்ல அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதிவரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்துவருவதால், மே 4-ம் தேதியிலிருந்து ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்திலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போர்வை, மெத்தை விரிப்பு, பாய் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்காக விழுப்புரம் வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், ஊரடங்கால் உணவுக்கு வழியில்லாததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

CREDITS - ஜெ.முருகன் | தே.சிலம்பரசன்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended