அழகிய கிராமத்தில் ஓர் அரக்கன்

  • 4 years ago
நெடுவாசலில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் கருக்காகுறிச்சி என்ற ஊரில் ஏறத்தாழ ஐந்து ஏக்கர் நிலத்தை, 2007-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்து எரிவாயு எடுத்திருக்கிறது ஓ.என்.ஜி.சி. 1991 முதல் 93 வரை எங்கள் நிலத்தில் துளையிட்டு எண்ணெய் எடுத்தார்கள். பின் 2005-ம் ஆண்டு வந்து சில பணிகளை மேற்கொண்டார்கள். பின் எண்ணெய்க் குழாய்க்காக வெட்டப்பட்ட நிலத்தை கான்கிரீட் போட்டு மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள். இப்போதும் அங்கிருந்து எண்ணெய் வடிந்து, நான்கு அடி பள்ளத்தில் நிற்கிறது. அந்தப் பள்ளத்தில் விழுந்து பல ஆடுகள் செத்து இருக்கின்றன. சில சமயம் அந்த எண்ணெயில் தீப்பற்றவும் செய்திருக்கிறது

Recommended