பிரியாணி விற்ற திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை! #viral

  • 4 years ago
Reporter - சிந்து ஆர்

`ஃபுட் இன்ஸ்பெக்டர்னு சொல்லிக்கிட்டு சிலர் வந்து எங்களை பயமுறுத்தினாங்க. நாங்க ஃபுட் சேப்டி லைசென்ஸ் எடுத்துட்டுதான் இந்த வியாபாரத்துல இறங்கினோம். ஆனாலும், எங்களை ஜீவிக்க விட மாட்டேங்கிறாங்க' என வீடியோவில் கலங்கியிருந்தார் திருநங்கை ஸஜனா.

கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் திருநங்கை ஸஜனா ஷஜியும் அவருடைய நண்பர்கள் சாலை ஓரத்தில் பிரியாணிப் பொட்டலம் விற்பனை செய்துவந்திருக்கிறார்கள். ஒரு பிரியாணிப் பொட்டலத்தை 60 ரூபாய். இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சிலர், கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிலர், ஸஜனாவிடமும் அவருடைய தோழர்களிடமும் பிரச்னை செய்திருக்கிறார்கள். இது பற்றி காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஸஜனா தனது ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவைப் பதிவு செய்தார்.

Recommended