தியாகம் செய்த 'NEERJA' வின் கதையை வைத்து தயாரிப்பு நிறுவனம் செய்த கேவலம்!
  • 3 years ago
கதையைப் படமாக்கும்போது, நீர்ஜா குடும்பத்தினருக்கும் லாபத்தில் பத்து சதவிகிதம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினரோ, ' பான் ஆம்' விமான நிறுவனம் நடத்தும் நீர்ஜா அறக்கட்டளைக்குப் பணத்தை வழங்குமாறு கூறினர். இந்த அறக்கட்டளை, வீரதீரச் செயல்களில் ஈடுபடும் பெண்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்திவருகிறது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் இந்த சினிமா மூலம் லாபம் ஈட்டிய நிலையில், தயாரிப்பு நிறுவனங்கள் உறுதியளித்தபடி, பத்து சதவிகிதத்தை வழங்கவில்லை. இதையடுத்து பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நீர்ஜாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Recommended