போலி சர்டிபிகேட் ? ! DNA டெஸ்ட் & ட்வீட் ! சிக்கலில் தனுஷு

  • 4 years ago
டி.என்.ஏ சோதனை செய்தால் உடனே முடியும் வேலையை இழுத்தடிப்பதால் சோஷியல் மீடியாவிலும் இது பற்றி அதிகம் பேசப்பட்டது. கதிரேசன் தரப்பில் டி.என்.ஏ. சோதனைக்கு தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து என்ன ஆகப்போகிறது என்பதுதான் மர்மமாகவே இருக்கிறது. எல்லோருக்கும் டி.என்.ஏ டெஸ்ட் தெரியும். ஆனால், அது எப்படி செய்யப்படுகிறது என்பது தெரியுமா?

உயிரின் அடிப்படை மூலக்கூறே டி.என்.ஏ தான். மற்ற எந்த மூலகூறுகளுகள் போல் இல்லாமல், டி.என்.ஏ தன்னைத் தானே நகல் செய்துகொள்கிறது. இதுதான் உயிரின் அடிப்படை. இந்த மூலக்கூறை ஆராய்ந்தால், அதில் ஒரு பேட்டர்ன் கிடைக்கும். அதை வைத்து இரண்டு பேருக்கிடையில் ரத்த தொடர்பு இருக்கிறதா, அவர்தான் நிஜமான உயிரியல் பெற்றோரா என்பதை கண்டறிய முடியும்.
ரத்தம், முடி, தோல் அல்லது உடலில் இருக்கும் எதாவது ஒரு திசுவின் மாதிரி கிடைத்தால் போதும். அதில் இருக்கும் டி.என்.ஏ. மூலக்கூறுவை ஆராய்ந்து அதன் வடிவத்தை பதிவு செய்துக்கொள்ளலாம்.

Recommended