சபாநாயகர் அவர்களே ! வரலாறு மன்னிக்காது

  • 4 years ago
சபாநாயகராகத் தேர்வான பின்பு, ‘‘சபையின் மாண்பைக் காப்பேன்... பாரபட்சம் இல்லாமல் நடப்பேன்’’ என பேரவைத் தலைவர் பேசுவது வழக்கம். இது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் என சொல்லியிருந் தால் சபாநாயகரை யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள். மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ-வைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரத்தை சபாநாயகருக்கு மட்டுமே வழங்கியிருக்கிறது அரசியல் அமைப்புச் சட்டம். உரிமை மீறல் கொண்டுவந்து யாரையும் சிறையில் அடைக்கலாம். இப்படி அதிகாரங்கள் குவிக்கப்பட்ட சபாநாயகர் மீது விமர்சனங்கள் வருவது ஜனநாயகத்துக்கு அழகா? எம்.எல்.ஏ மீது வழக்குப் போடுவதாக இருந்தால் சபாநாயகரின் அனுமதி தேவை. எம்.எல்.ஏ எங்காவது கைதுசெய்யப்பட்டால், உடனே, சபாநாயகருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம். ‘கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்’ எனப் புகார் எழுந்தபோது, தனபால் சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டாரா? அப்படிச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சோதனையாவது செய்து பார்த்தாரா? சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பற்றி விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதில் ஏன் தயக்கம்? ‘ரகசிய வாக்கெடுப்பு முறை இதுவரையில் கடைப்பிடிக்கப்படவில்லை’ என்கிறார். ரகசிய வாக்கெடுப்பு முறை நடத்தக்கூடாது என அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? ‘செய்யக்கூடாது’ என சொல்லப்பட்டதைத்தான் தவிர்க்க வேண்டும்; ஆனால், இதுவரை செய்யாத ஒன்றைக் கடைப் பிடிக்கக் கூடாது என சட்டத்தில் இல்லையே!

Recommended