ராகுல்காந்திக்கு துணிச்சல் இருந்தால் தன்னை சிறையில் அடைக்கட்டும்: ஸ்மிருதி இரானி சவால்

  • 5 years ago
1.மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மீண்டும் கைது.
தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு கோரி, காந்தியவாதி சசி பெருமாள் உயிரிழந்த இடம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி, மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து காந்தியவாதி சசி பெருமாள் உயிர் நீத்த மார்த்தாண்டம், உண்ணாமலை கடை எதிரே உள்ள செல்போன் கோபுரம் அருகில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாகக் கூறி, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்தனர்.

2.பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அட்டாக் பாண்டி கைது.
மதுரையில் திமுகவின் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த மூன்று ஆண்டுக்கு முன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். அட்டாக் பாண்டி, இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாக இருந்தார். மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தா பிரபல ரவுடி அட்டாக் பாண்டி இன்று மும்பையின் புறநகர் பகுதியான வஷியில் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் நெருக்கமாகவும் வலது கையாகவும் செயல்பட்டுவந்தவர் என்று கூறப்படுகிறது. அட்டாக் பாண்டி, முன்னாள் மதுரை வேளாண் விற்பனைக்குழுவின் தலைவராக இருந்தார். மேலும், மதுரை மாநகர திமுகவின் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டார். மதுரையில் கொலை,ஆள் கடத்தல், நில அபகரிப்பு என இவர் மீது நிறைய புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #Karthik Subbaraj #dhanush

Recommended