ஆடி 18 பண்டிகை முன்னிட்டு சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை- வீடியோ

  • 5 years ago
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஏரியூர், பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல், பெரும்பாலை போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை பென்னாகரம் வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவந்தனர். தற்போது வரும் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு மேச்சேரி, ஓமலூர், சேலம், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, பெங்களுர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆட்டு வியாபாரிகள் ஆடுகளை வாங்கி லாரி மற்றும் டெம்போ போன்ற வாகனங்கள் மூலம் ஏற்றிச் சென்றனர். இங்கு உள்ள கிராமங்கள் மலை சார்ந்த கிராமங்களாக உள்ளதால் காடுகளில் உள்ள இயற்கையான உணவுகளை இங்குள்ள ஆடுகள் உண்டு வளர்வதால் ஆட்டிறைச்சி ருசி அதிகம் என்பதால் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் அதிகளவு விற்பனையானது. பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடி பண்டிகையை முன்னிட்டு ஒரு ஆடு ரூ. 5000 முதல் 10000 வரை விற்பனை ஆனது. இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

des : Goats for sale by goat traders at Pennagaram weekly market in Durumapuri district today.

Recommended