திருப்பத்தூரை வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

  • 5 years ago
வேலூர் மாவட்டம்,திருப்பத்தூரில் வழக்கறிஞர்கள் இன்று இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர் தமிழகத்தில் பெரிய மாவட்டமான 13 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடங்கிய வேலூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது மக்கள் தொகையும் அதிகம் உள்ளது இதனால் திருப்பத்தூர்,ஜோலார்பேட்டை ஏலகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் எதாவது குறை புகார் அளிக்க வேண்டும் என்றால் வேலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று வர பல மணி நேரமாகிறது இதனால் விவசாயிகளும் ஏழை எளிய அடித்தட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர் ஆகவே திருப்பத்தூரை வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அப்போது தான் திருப்பத்தூரை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ,வேலைவாய்ப்பும் முன்னேற்றமடைய முடியும் என கோரி இன்று இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் மாவட்டத்தை பிரிக்க கோரி நீதிமன்றம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

des : It should be declared as a separate district separating Tirupattur from Vellore

Recommended