சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மலைப்பாம்புகள் குறித்த ஆராய்ச்சி- வீடியோ
  • 5 years ago
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன கால்நடை மருத்துவமனையில் மலைப்பாம்புகளுக்கு உள் அறுவை சிகிச்சை மூலம் ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தி அதன் இயல்புகளை கண்டறிய முதல்முறையாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட வன கால்நடை மருத்துவர் அசோகனுக்கு இந்திய வனவிலங்குகள் ஆராய்ச்சி மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.
.இந்தியாவில் மலைப்பாம்புகள் குறித்த ஆராய்சி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளில் இதுகுறித்த பல்வேறு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் இந்திய வன விலங்கு ஆராய்ச்சி மையம் மூலம் தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 மலைப்பாம்புகளுக்கு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாம்புகளின் உடலில் தட்பவெப்பம், சுற்றுப்புற சூழல், இனப்பெருக்கம், உடல் இயப்பு குறித்து கண்டறிய இந்தியாவில் முதன்முறையாக மலைப்பாம்புகளின் வயிற்றுப்பகுதியில் 18 கிராம் எடையுள்ள ரேடியோ டிரான்ஸ்மிட்டர் பொருத்தி உள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள காராட்சிக்கொரை வனகால்நடை மருத்துவர் டாக்டர் அசோகன் உள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். 10 பாம்புகளில் 3 பெண்பாம்புகள் 7 ஆண் பாம்புகளுக்கு பொருத்தி சோதனை செய்யப்பட்டது. ஆண் பாம்புகள் 12 அடி நீளமும் பெண் மலைப்பாம்புகள் 14 அடி நீளமும் கொண்டுள்ளது. இந்த ஆராய்சி இன்னும் இரண்டு ஆண்டுள் தொடர்ந்து நடைபெறும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட 10 பாம்புகளில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் பவானிசாகர் மற்றும் தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்ட மலைப்பாம்புகள் பாதையில் ஆண்டெனா மூலம் கிடைக்கும் ரேடியோ சிக்னலை வைத்து பாம்பின் நடமாட்டம் அதன் இயல்புகள் கண்டறியப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக பாம்புகளுக்கு மயக்கமருந்து செலுத்தி உள் அறுவை சிகிச்சை செய்து ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தி பாம்புகள் உயிரிழக்காமல் சிறப்பாக சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் அசோகனுக்கு டெல்லியில் உள்ள இந்திய வன விலங்கு ஆராய்ச்சி மையம் பாராட்டியுள்ளது. பாம்புகள் மூன்று கிலோ மீட்டர் வரை சென்று இரை தேடி மான், குரங்குகளை வேட்டையாடும். சில நேரங்களில் மரத்தடியில் நிற்கும் மனிதர்களை கூட விழுங்கிவிடும் தன்மைகொண்டு இந்த மலைப்பாம்புகள் 40 வருடங்கள் உயிர் வாழக்கூடியது. பொதுவாக இந்த மலைப்பாம்புகள் 80 முட்டைகள் இட்டு 80 குஞ்சுகள் பொரிக்கும். தற்போது பொருத்தப்பட்ட ரேடியோ டிரான்ஸ்மீட்டர் மூலம் பாம்புகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டயறிய முடியும் என டாக்டர் அசோகன் தெரிவித்துள்ளார்.

DES : Research on pythons at Sathiyamangalam Tiger Archive for the first time in India
Recommended