சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என ஆசையா.?

  • 5 years ago
சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என ஆசையா.. இதோ உங்களுக்காகச் சில முக்கியமான டிப்ஸ்

நிலம் எல்லோருடைய உரிமை. இதைச் சரியான முறையில் அடைய வேண்டும். இப்படி நிலம் வாங்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் நிலம் தொடர்பாக ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்பதைக் கவனிப்பது தான். இதை முறையாக வழக்கறிஞர் ஒருவரை வைத்துச் சரிபார்க்க வேண்டும்.

நிலம் மறு விற்பனைக்கு வருகிறது என்றால், release certificate மற்றும் EC எனப்படும் encumbrance certificate ஆகியவற்றை முறையாகச் சரிபார்க்க வேண்டும். மேலும் நிலத்தின் மூலம் கடன் ஏதேனும் உள்ளதா என்றும் சரி பார்க்க வேண்டும்.

நிலத்தின் மீது எந்தக் கடனும் இல்லையெனில் வரி ரசீதைச் சரிபார்க்கவும்.

அனைத்திற்கும் தாண்டி அரசு ஆவணங்களில் இருக்கும் அளவுகள், விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒன்றுக்கு இரு முறை சரி பாருங்கள்.

இவை அனைத்தும் சரியாக இருந்தால் தாராளமாக நிலம் வாங்கலாம்.