சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் காளை இழுக்கும் நிகழ்ச்சி- வீடியோ
  • 5 years ago
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் கம்பம் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக என்று காளை இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காளைகளை பிடித்து வருவதற்காக புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த வாலிபர்கள் மற்றும் பெரியவர்கள் சென்று காளைகளை பிடித்துக்கொண்டு மேள தாளம் முழங்க ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவிலை சுற்றி அழைத்து வரப்பட்டது. கோவில் முன்பு கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை நிற்கவைத்து மரியாதை செய்து அதில் ஒரு காளை மட்டும் தேர்வு செய்து கம்பம் நடப்பட்ட இடத்தில் கீழே படுக்க வைத்து ஒரு சுற்று சுற்றி மீண்டும் காளையை அவிழ்த்து விட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காளைகளை காண்பதற்காக சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர். மாரியம்மன் கோவில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சிவனாக பாவித்து வழிபாடு நடத்தியதாகவும் கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை அழைத்து வந்து நந்தீஸ்வரரை வழிபட்டு ஒரு காளையை படுக்க வைத்து ஒரு சுற்று சுற்றினால் மழை பெய்து ஊருக்கு நன்மை பயக்கும் என்பது ஐதிகம் என அப்பகுதி பெரியவர்கள் தெரிவித்தனர்
des : The bull drawing took place at the Mariamman temple festival near Sathyamangalam.

Recommended