அருள் பாலித்துவரும் வீரமுனியாண்டவர் கோயில் திருவிழா- வீடியோ

  • 5 years ago
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவையல் கிராமத்தில் அருள் பாலித்துவரும் வீரமுனியாண்டவர் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதுபோல் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் 80-ஆம் ஆண்டாக மாட்டு வண்டி குதிரை வண்டி, பெரியமாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டுகுதிரை, கரிச்சான்குதிரை, என நான்கு பிரிவுகளாகவும் பூஞ்சிட்டுமாடு, நடுமாடு, நடுகுதிரை என மூன்று பிரிவுகளாகவும் மொத்தம் 7 பிரிவுகளாக இரட்டைமாட்டு வண்டிகளும், குதிரைவண்டிகளும் பந்தயத்தில் கலந்து கொண்டன. பந்தயத்தில் பெரிய மாட்டில் புதுக்கோட்டை மாவட்டம்,மதுரை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வண்டிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தது. குதிரை வண்டி பந்தயத்தில் திருச்சி, கரூர், கோவை மாவட்ட குதிரைவண்டிகள் ழுதல் மூன்று இடங்களை பிடித்தது. முதல் இடங்களை பிடித்த மாடு, குதிரை வண்டிகளுக்கு பணமுடிப்பு பரிசாக வழங்கபட்டது. பந்தயத்தை சாலையின் இருமருங்கிலும் குழுமிய இருந்த மக்கள் கண்டு களித்தனர்.

DES : Arul Palithu is the Veeramuniyananda temple festival

Recommended