சாலை வசதி செய்து தருவதாக உறுதியளித்தால் மட்டுமே வாக்களிப்போம்- மலைக் கிராம மக்கள்- வீடியோ

  • 5 years ago
தேனி மாவட்டம் போடியில் சாலைவசதி இல்லாத சென்றல் மலைக் கிராமத்திற்கு வாக்குபதிவு இயந்திரங்களை குதிரை மூலமாக கொண்டு சென்ற தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவிற்காக வாக்கு சாவடியில் காத்திருந்தனர். அப்போது போடி வட்டாட்சியர் தங்களுக்கு சாலைவசதி செய்து தருவதாக உறுதியளித்தால் மட்டுமே வாக்களிப்பில் பங்கெடுப்போம் என கூறி வாக்ககுப்பதிவை நிராகரித்தனர். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் துணைவட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில் சென்றல் கிராமத்தில் வசித்துவரும் சொக்கையன் மனைவி லட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்றல் கிராமத்தில் இருந்து 7கிமீ துரம் டோலிகட்டி தூக்கி குரங்கணி கொண்டு வந்து அங்கிருந்து போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்தகைய சூழ்நிலை உள்ளதால் தங்களுக்கு சாலைவசதி செய்து தருவதாக உறுதியளித்தால் மட்டுமே வாக்களிப்போம் என பிடிவாதமாக மறுத்து விட்டனர்.

des : We will vote only if we can guarantee road safety

Recommended