பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறும் பிளஸ் 2 மாணவர்கள்...

  • 5 years ago
தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலை பள்ளிகளில் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8,42, 512 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதியதில், 7, 69,225 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்கள் 93.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று முதல் பெற்று வருகின்றனர்.


#Tamilnadu
#MarkSheet
#Plus2
#Pondicherry

Recommended