புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி- வீடியோ

  • 5 years ago
தென்காசி அருகே 6 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகளின் கல்விக்காக புதிய அங்கன்வாடி கட்டிடத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் திறந்து வைத்தார் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ளது கரிசல் குடியிருப்பு இந்த பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஒரு அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர் அதன் பயனாக சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் அந்த பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டது இந்தகட்டிடத்தை கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்கன்வாடியில் அமைப்புகள் குறித்தும் ஆய்வு செய்தார் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

des : The new Anganwadi building is open to the public

Recommended