காலிகுடங்களுடன் குடியாத்தம் ஆம்பூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்- வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போஜனாபுரம் உள்ளி கூட்டுரோடு பகுதியில் 6 மாத காலமாக குடிநீர் வழங்கவில்லை எனவும்சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும்நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறியும் முறையாக குடி நீர்வழங்காததை கண்டித்து போஜானபுரம், சுந்தரகுட்டை, உள்ளி கூட்டுரோடு, ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் குடியாத்தம் ஆம்பூர் சாலையில் சாலை மறியலில்ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தைநடத்தினர் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்வராததால் இரு சாலைகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் மிகவும்அவதிப்பட்டனர் இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது தாமதமாகவந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல்கைவிடப்பட்டது



Des : More than 100 civilians were grazed at Gambhiram road on road at Ambur Road

Recommended