மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பனிக்கு திரும்ப வேண்டும் ..அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி- வீடியோ
  • 5 years ago
போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் ரூ.1.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். பின்னர் 1007 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார் இதையடுத்து அவர் பேசுகையில் : 2582 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.நீதி போதனை வகுப்பறைகள் கொண்டு வரப்படும். யோகா மற்றும் விளையாட்டு துறையில் மாணவர்களை ஊக்குவிக்கப்படுவார்கள். விரைவில் தேர்வு வர உள்ளதாலும் மாணவர்களின் நலன் கருதியும் அரசு வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறோம். 7 முதல்10 வகுப்பு வரை பயிலும் 13 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் மடிக்கணினி வழங்கப்படும், பிப்ரவரி 10 க்குள் அனைத்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும், அடுத்த ஆண்டு 4 சீருடை வழங்கப்படும், 12 ம் வகுப்பு முடித்தாலே வேலை, 9 முதல் 12 வகுப்புகளில் மார்ச்சுக்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, இண்டர் நெட் இணைப்பு கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Des : The teachers should return to the ice for the benefit of students .. Madhavan Sengottiyan interview
Recommended