ஸ்டெர்லைட்டால் கணவனை இழந்த பெண்..கண்ணீருடம் ஆட்சியரிடம் மனு -

  • 5 years ago
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுார் தாலுகா தலைவன்கோட்டையை சேர்ந்த தங்கத்துரை என்பவரது மனைவி, பூங்கொடி தனது மகன் மற்றும் உறவினருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் தங்கதுரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டி, பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். முகநூல் வாயிலாகவும் பரப்புரை செய்தார். ஆனால் ஆலை திறக்காத காரணத்தினால் கடந்த 3 மாதமாக மனவேதனையில் இருந்து வந்தார். ஜன 1ம் தேதிக்குள் ஆலை திறக்காவிட்டால் உயிரை மாய்த்து கொள்வேன் என்று முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் கடந்த டிசம்பர் 14ம் தேதியன்று சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பே விஷம் அருந்தினார். பாளை., அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 8ம் தேதி மரணமடைந்தார். தற்போது நானும் என் 2 சிறிய பெண் குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விதவையாக உள்ள எனக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கும் உரிய நிவாரணம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றார்.

Des : The woman who lost her husband with Sterlite was petitioned to the governor

Recommended