ஆக்கிரமித்து கட்டிய கட்டிடம் .. இடித்து தள்ளிய அரசு அதிகாரிகள்!!!- வீடியோ

  • 5 years ago
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டிக் குப்பம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வசிப்பவர் மஞ்சுளா சுந்தர், இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் வீடுகளை இழந்ததால் தமிழக அரசு சார்பில் ரெட்டிக் குப்பம் பகுதியில் அரசு சார்பில் வீடு கட்டி குடியமர்த்தப்பட்டவர், மஞ்சுளா சுந்தர் தனது வீட்டருகே உள்ள 7-அடி காலி நிலத்தை ஆக்கிரமித்து இரண்டடுக்கு மாடி வீடுகட்டியிருப்பதாக அதே பகுதியில் வசிக்கும் ஜான்சி ராணி என்பவர் கடந்த 2018-ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், கடந்தாண்டு டிசம்பர் மாதம் மஞ்சுளா சுந்தர் வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து செங்கல்பட்டு கோட்டாச்சியர் தலைமையில் ஊராட்சி அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் வீட்டை இடிக்க முற்பட்டனர், தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அரசு அதிகாரிகளை சிறைபிடித்து, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.தகவல் அறிந்து வந்த காணத்தூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அரசு அதிகாரிகளை மீட்டனர், இதனால் வீட்டை இடிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர், இதையடுத்து காலை மஞ்சுளா சுந்தர் வீட்டை இடிக்க வந்த அரசு அதிகாரிகளை பொதுமக்கள் மீண்டும் சிறை பிடிக்க முயன்றதால் காணத்தூர் போலீசார் லேசான தடியடி நடத்தி பலத்த போலீஸ் பாதுகாப்போடு தற்போது வீட்டை இடித்தனர்

Des : Occupied building building .. the demolished government officials !!!

Recommended